எம்.எல்.சி. பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவில்லை- அதிகாரி தகவல்

எம்.எல்.சி. பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.;

Update:2022-08-09 21:34 IST

மும்பை, 

எம்.எல்.சி. பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவில்லை என்று அதிகாரி தெரிவித்தார்.

ராஜினாமா அறிவிப்பு

சிவசேனா 2 ஆக உடைந்து 40 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றதால், உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கடந்த ஜூன் மாதம் கவிழ்ந்தது. இதையடுத்து உத்தவ் தாக்கரே ஜூன் 29-ந் தேதி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும் எம்.எல்.சி. பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதிகாரி விளக்கம்

இந்தநிலையில் உத்தவ் தாக்கரே எழுத்து பூர்வமாக எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்யவில்லை என விதான் பவன் அதிகாரி ஒருவர் கூறினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எம்.எல்.சி. பதவியை அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்யவில்லை. அவர் முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்தது தொடர்பான எழுத்து பூர்வமான ஆவணங்கள் எங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை" என்றார்.

இதுகுறித்து சிவசேனா தரப்பில் மேல்-சபை துணை தலைவர் நீலம்கோரே கருத்து கூற மறுத்துவிட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்