தானேயில் ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரி கைது

தானேயில் ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரி கைது செய்யப்பட்டார்.;

Update:2022-09-02 17:42 IST

தானே, 

மும்பை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தானே துணை மண்டலத்தில் அதிகாரியாக இருந்து வருபவர் சிவராஜ் பவார் (வயது33). இவரிடம் 2 பேர் தங்களுக்கு மெட்ரோ பணிக்காக கையகப்படுத்திய நில சான்றிதழ் தருமாறு விண்ணப்பித்து இருந்தனர். இதற்கு அதிகாரி சிவராஜ் பவார் ரூ.24 ஆயிரம் லஞ்சம் தந்தால் சான்றிதழ் தருவதாக தெரிவித்தார். பணம் தருவதாக தெரிவித்த அவர்கள், சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் யோசனைப்படி அலுவலகத்தில் இருந்த அதிகாரி சிவராஜ் பவாரிடம் லஞ்சபணத்தை கொடுத்தனர்.

இதனை பெற்ற போது மறைந்து இருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி சிவராஜ் பவாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்