மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்
நவிமும்பை மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.;
மும்பை,
நவிமும்பை மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமரா
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நவிமும்பை மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிட்டு உள்ளது.
நவிமும்பை மாநகராட்சி 79 தொடக்க பள்ளிகள், 53 உயர்நிலை பள்ளிகளை நடத்துகிறது. இதில் 52 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.
55 பள்ளிகள்
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம் தொடர்பாக மக்கள் தொடா்பு அதிகாரி மகேந்திர கோண்டே கூறுகையில், "முதல் கட்டமாக 55 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. சிக்சான் விஷன் திட்டத்தின் கீழ் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் இது செயல்படுத்தப்பட உள்ளது. நவிமும்பை மாநகராட்சி பள்ளிகளில் ஆண்டு தோறும் 1,000 மாணவர்கள் அதிகரிக்கின்றனர்" என்றாா்.