படுத்த படுக்கையாக இருந்த 19 வயது மகளை கொலை செய்த தாய்- அந்தேரியில் சம்பவம்
அந்தேரியில் படுத்த படுக்கையாக இருந்த 19 வயது மகளை விரக்தியில் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
அந்தேரியில் படுத்த படுக்கையாக இருந்த 19 வயது மகளை விரக்தியில் கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளி இளம்பெண்
மும்பை அந்தேரி போலீசாருக்கு கடந்த 15-ந்தேதி அழைப்பு ஒன்று வந்தது. இதில் 19 வயதுயுடைய இளம்பெண் மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சாகர் ரோடு பார்சிவாடா வீர் அனுமான் கட்டிடத்திற்கு சென்றனர். அங்கு சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் இளம்பெண் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் உயிரிழந்த இளம்பெண் வைஷ்ணவி (வயது19) எனவும், மாற்றுத்திறனாளியாக பிறந்த வைஷ்ணவி படுத்த படுக்கையாக இருந்து உள்ளார்.
தாய் கைது
அவரது தாய் பெயர் சாரதா. இவர் கணவர், மேலும் 2 மகள்களுடன் வசித்து வந்து உள்ளார். கணவர் துப்புரவு தொழிலாளியாகவும், மகள்கள் காலை சிற்றுண்டி கடையும் நடத்தி வந்தனர்.
இளம்பெண்ணின் சாவு குறித்து தாய் சாரதாவிடம் விசாரித்ததில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். மகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு விரக்தியில் கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சாரதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற மகளை தாய் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.