மும்பை மாநகராட்சி தேர்தல்- பெண்களுக்கு சரிபாதி வார்டுகள் ஒதுக்கீடு

மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக சரிபாதி வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.;

Update:2022-05-31 22:18 IST

மும்பை, 

மும்பை மாநகராட்சி தேர்தலுக்காக சரிபாதி வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு 118 வார்டுகள்

மும்பை மாநகராட்சி பதவி காலம் நிறைவு பெற்று சில மாதங்கள் முடிந்த நிலையில் தேர்தல் நடத்தப்படவில்லை. மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார். இருப்பினும் மாநகராட்சி தேர்தலை விரைவில் நடத்த அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மொத்தம் உள்ள 236 வார்டுகளில் எந்தெந்த பிரிவினருக்கு எத்தனை வார்டுகள் என்பது நேற்று முடிவு செய்யப்பட்டது. இதில் சரிபாதியாக 118 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் 109 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கும், 8 வார்டுகள் எஸ்.சி. பிரிவினருக்கும், ஒரு வார்டு எஸ்.டி. பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

குலுக்கல் முறையில் தேர்வு

இதையடுத்து எந்தெந்த பிரிவினருக்கு எந்தெந்த வார்டுகள் என்பது குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்த வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனைகள், ஆட்சேபனைகள் வருகிற 6-ந் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து ஏற்கப்படுகிறது. இறுதி வார்டு இடஒதுக்கீடு பட்டியல் 13-ந் தேதி கெஜட்டில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு தடை உத்தரவு காரணமாக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வார்டுகள் ஒதுக்கப்படவில்லை.

----

Tags:    

மேலும் செய்திகள்