வெர்சோவா அருகே இசைக்கலைஞர் படுகொலை
வெர்சோவா அருகே இசைக்கலைஞர் படுகொலை செய்யப்பட்டார்.;
மும்பை,
மும்பை அந்தேரி வெர்சோவா அருகே சாத் பங்களா பகுதியில் 25 வயது வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய பரிசோதனையில் தலையில் பேவர்பிளாக் காங்கிரீட் கல்லால் தாக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இருப்பினும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், கொலையானவர் இசைக்கலைஞரான சூரஜ் மனோஜ் திவாரி என தெரியவந்தது. இவர் மும்பையில் உள்ள அனேக இடங்களில் தெருக்களில் கிதார் வாசித்து பொதுமக்களை கவர்ந்து வந்ததாக தெரியவந்தது. மேலும் அவரை அடையாளம் தெரியாத ஆசாமி தாக்கி கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கொன்ற நபர் யார்?, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.