தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிக்கு ரூ.5 லட்சம் அபராதம்

Update:2023-06-05 00:15 IST

மும்பை, 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பத்லாப்பூர் பகுதி தலைவர் ஆஷிஸ் ஆனந்த் (வயது35). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி தனது ஆதரவாளர்களுடன் அம்பர்நாத்தில் உள்ள சாதனா மத் ஆசிரமத்துக்குள் நுழைந்தார். அவர்கள் ஆசிரமத்தை சூறையாடி அங்கு தங்கியிருந்தவர்களையும் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆஷிஸ் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு மீதான விசாரணை கல்யாண் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ஆஷிஸ் ஆனந்த் குற்றவாளி என அறிவித்தார். அதே நேரத்தில் அவரின் ஆதரவாளர்கள் விடுவிக்கப்பட்டனர். நீதிபதி ஆஷிஸ் ஆனந்தின் தண்டனை விவரத்தை உடனடியாக அறிவிக்காமல் அவரை ஜாமீனில் விடுவித்தார். அதே நேரத்தில் ரூ.5 லட்சம் அபராதம் விதித்து அந்த பணத்தை சேதப்படுத்திய ஆசிரமத்துக்கு ஒரு மாதத்தில் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்