வசாய்,
தானே மாவட்டம் மிராபயந்தர்-வசாய்விரார் போலீசார் கடந்த 8-ந் தேதி இரவு மிராரோடு ஹட்கேஷ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி ஒருவர் நடமாடியதை கண்டனர். போலீசார் அவரை நெருங்கிய போது மோட்டார் சைக்கிளை விட்டு ஓட தொடங்கினார். போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நைஜிரீய நாட்டை சேர்ந்த பிரஜை எனவும், அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள எம்.டி போதைப்பொருள் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். ஏற்கனவே போதைப்பொருள் வழக்கில் பிடிபட்டு புனே எரவாடா சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தவர் என தெரியவந்தது.