இசைக்குழு பாரில் ஆபாச நடனம்- 13 பெண்கள் மீட்பு

Update:2022-12-04 00:15 IST

மும்பை, 

மும்பை ஒர்லியில் உள்ள இசைக்குழு (ஆர்க்கெஸ்ட்ரா) பார் ஒன்றில் ஆபாச செயல் நடந்து வருவதாக சமூக குற்றத்தடுப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதன்பேரில் போலீசார் நேற்று அதிகாலை பாரில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அங்கு ஆபாசநடனம் நடந்து வந்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அங்கிருந்த 13 பெண்களை மீட்டனர். இதனை நடத்திய 23 பேரை பிடித்து கைது செய்தனர். அங்கிருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கம், மடிக்கணினி மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் 26 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்