தானே,
தானே மாவட்டம் காசர்வடவிலி பகுதியில் உள்ள 22 மாடி கட்டிடத்தில் வசித்து வந்தவர் ரோகிணி முல்கி (வயது65). இவர் நேற்று மாலை 4 மணியளவில் 5-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இருந்தார். இதில் எதிர்பாராதவிதமாக மூதாட்டி பால்கனியில் இருந்து தவறி விழுந்தாா். அவர் 2-வது மாடி வீட்டின் பால்கனியில் விழுந்தார். படுகாயமடைந்த மூதாட்டியை குடும்பத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.