கோரேகாவில் தீ விபத்தில் ஒருவர் பலி

கோரேகாவ் பகுதியில் உள்ள ஸ்ரீகணேஷ் ரகிவாசி சேவா மண்டல் என்ற கட்டிடத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார்.;

Update:2023-06-27 01:15 IST

மும்பை,

மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள ஸ்ரீகணேஷ் ரகிவாசி சேவா மண்டல் என்ற கட்டிடத்தில் உள்ள வீட்டில் நேற்று காலை 8 மணியளவில் கியாஸ் அடுப்பில் தீப்பிடித்தது. அடுப்பில் பிடித்த தீ சிலிண்டருக்கு பரவியது. இந்த விபத்தில் வீட்டில் இருந்து ஹரிஷ் சவான் (வயது55) காயமடைந்தார். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு படையினர் வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்த ஹரிஷ் சவானை மீட்டு அருகில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஹரிஷ் சவானை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்