பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ரூ.45 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆபரேட்டர் -ஏஜெண்ட் கைது

பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ரூ.45 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆபரேட்டர், ஏஜெண்ட் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-02-03 00:15 IST

மும்பை, 

ரத்னகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தார். இதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக புதுப்பிக்கும் பணி இடைவெளியில் நின்றது. இதனால் பிழைகளை சரி செய்ய மும்பை பி.கே.சியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தார். அங்கிருந்த ஏஜெண்ட் சேகர் என்பவர் சரி செய்து தருவதாகவும், டேட்டா ஆபரேட்டருக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் லஞ்சம் தரும்படியும் கேட்டார்.

இது தொடர்பாக நடத்திய பேரத்தில் ரூ.80 ஆயிரம் தருவதாகவும், முதற்கட்டத்தில் ரூ.45 ஆயிரம் தருவதாகவும் ஒப்புக்கொண்டார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த யோசனைப்படி அந்த நபர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று ஏஜெண்டிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த ஏஜெண்ட் மற்றும் தொடர்புடைய டேட்டா ஆபரேட்டர் ஆகிய 2 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்