அண்டாப்ஹில்லில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு- துப்பாக்கியால் மிரட்டிய வாலிபர் கைது
அண்டாப்ஹில்லில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஏர்கன் துப்பாக்கியால் மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
அண்டாப்ஹில்லில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஏர்கன் துப்பாக்கியால் மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
வாக்குவாதம்
மும்பை அண்டாப்ஹில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகனம் நிறுத்துவது தொடர்பாக வாலிபருக்கும், மற்றொரு நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த வாலிபர் தான் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை எடுத்து சம்பந்தப்பட்ட நபரை நோக்கி சுட்டு விடுவதாக மிரட்டி தாக்குதலில் ஈடுபட முயன்றார்.
அப்போது வாலிபருடன் இருந்த பெண் ஒருவர், அவரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
மிரட்டியவர் கைது
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. தகவல் அறிந்த போலீசார் ஏர்கன் துப்பாக்கியை வைத்து மிரட்டிய வாலிபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிதின் அரோரா (வயது35) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.