நாக்பூரில் ரெயில் முன் பாய்ந்து போலீஸ் ஏட்டு தற்கொலை
நாக்பூரில் ரெயில் முன் பாய்ந்து போலீஸ் ஏட்டு தற்கொலை செய்துகொண்டார்,;
நாக்பூர்,
நாக்பூர் நகரில் உள்ள பெல்டாரோடி போலீஸ் நியைத்தில் பணியாற்றி வந்தவர் பிரமோத் ராவத்(வயது55). இவர் மனேவாடா பகுதியில் வசித்து வந்தார். நேற்று காலை இவர் மோட்டார் சைக்கிளில் மனிஷ் நகர் ரெயில்வே கிராசிங் பகுதிக்கு வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, திடீரென அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்தார். இதில் ரெயிலில் அடிப்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.