ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை

நில்ஜே-தலோஜா இடையே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-03-30 00:15 IST

தானே, 

நில்ஜே-தலோஜா இடையே ரெயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

உடல் மீட்பு

தானே டிரான்ஸ்ஹார்பர் வழித்தடமான நில்ஜே-தலோஜா இடையே ரெயில் தண்டவாளத்தில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இவர் தானே போலீசில் சிறப்பு பிரிவில் போலீஸ்காரராக இருந்து வந்த வைபவ் கதம் என்று தெரியவந்தது. மேலும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி ஜிதேந்திர அவாத்தின் மெய்க்காவலராகவும் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

இது குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்தனர். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜிதேந்திர அவாத்தின் படத்தை மார்பிங் செய்ததாக ஆனந்த் கர்முஸ் என்பவரை போலீஸ்காரர் வைபவ் கதம் பங்களாவிற்கு கடத்தி வந்தார். பின்னர் அவரை 3 போலீசார் இணைந்து தாக்கி உள்ளனர். இது தொடர்பாக வைபவ் கதம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்