சந்திராப்பூர்,
சந்திராப்பூர் மாவட்டம் ராஜூரா பகுதியில் தனியார் பஸ் ஒன்று ஐதராபாத் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளிகள் பயணம் செய்தனர். அதிகாலை 2.30 மணி அளவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பஸ்சில் இருந்த 19 தொழிலாளிகள் பலத்த காயமடைந்தனர்.
விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருடன் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை ராஜூரா மற்றும் சந்திராப்பூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 18 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களில் ஒருவர் பெயர் சேத்தன் ரத்ரி என அடையாளம் தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.