ராகுல்காந்திக்கும், சாய்பாபாவுக்கும் ஒரே சிந்தனை - ராபர்ட் வதேரா
ராகுல் ராகுல்காந்திக்கும், சாய்பாபாவுக்கும் ஒரே சிந்தனை என ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.;
ஷீரடி,
ராகுல் ராகுல்காந்திக்கும், சாய்பாபாவுக்கும் ஒரே சிந்தனை என ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
ஒற்றுமை யாத்திரை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் மைத்துனரும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா நேற்று அகமதுநகர் மாவட்டம் சீரடியில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பிறகு அவர் அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய ஒற்றுமை பாதயாத்திரை நடத்திவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல ஊர்களுக்கு சென்று ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்து வருகிறார். அதிக அளவிலான மக்களும் அவருடன் இணைந்து பாதயாத்திரையில் பங்கேற்கின்றனர். எதிர்காலத்தில் நிச்சயம் மாற்றம் வரும். ராகுல் காந்தி மக்களின் புதிய நம்பிக்கை ஆவார்.
அபரிமிதமான அன்பு
நாம் தற்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜனதா தலைமையிலான அரசின் குறைகளை கூறும்போதெல்லாம், அவர்கள் காங்கிரஸ் கட்சியை கேலி செய்கின்றனர். ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்காவும் தங்கள் பணியை நிறுத்தமாட்டார்கள். நாங்கள் மக்களுடன் ஒன்றாக பிணைந்திருக்கிறோம். ஒற்றுமைக்காக பாடுபடுகிறோம்.
காந்தி குடும்பம் மக்களிடம் இருந்து அபரிமிதமான அன்பை பெற்று வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மக்களுக்கு உதவ பாடுபடுவார்.
சாய்பாபா சிந்தனை
இந்த பாதயாத்திரை, நாட்டில் மாறுதல் ஏற்படுத்தும். சாய்பாபா, ஒற்றுமையை போதித்தார். ராகுல்காந்தி சிந்தனையும், சாய்பாபா சிந்தனை போலவே இருக்கிறது. அவருக்கு சாய்பாபா ஆசி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.