2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியுடன் போட்டியிட மாட்டோம் என கட்சி தலைமையிடம் கூறினோம்- ராகுல் செவாலே எம்.பி. தகவல்

காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 2024- தேர்தலில் போட்டியிட மாட்டோம் என சிவசேனா தலைமையிடம் கூறினோம் என ராகுல் செவாலே எம்.பி. கூறியுள்ளார்.;

Update:2022-07-23 20:02 IST

மும்பை, 

காங்கிரசுடன் கூட்டணி அமைத்து 2024- தேர்தலில் போட்டியிட மாட்டோம் என சிவசேனா தலைமையிடம் கூறினோம் என ராகுல் செவாலே எம்.பி. கூறியுள்ளார்.

சிவசேனா கட்சியின் மக்களவை குழு தலைவராக ஏக்நாத் ஷிண்டே அணி எம்.பி. ராகுல் செவாலே நியமித்து உள்ளது. இந்த நிலையில் அவர் கூறியிருப்பதாவது:-

மோடி அலை

2024-ம் நாடாளுமன்றத்தை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேயை எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தினோம். 2024 தேர்தலில் பா.ஜனதா இன்றி வெற்றி பெறுவது கடினம் எனவும் உத்தவ் தாக்கரேவிடம் கூறினோம். ராகுல்காந்தியை தலைவராக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினோம்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலின் போதும் மோடி அலையே வீசும், அப்போது காங்கிரஸ் கூட்டணியால் பா.ஜனதாவை எதிர்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தோம்.

தேசிய அளவில்...

அப்போது சஞ்சய் ராவத் அடுத்த தேர்தலில் உத்தவ் தாக்கரேயை தேசிய அளவில் களம் இறக்கபோவது போல தெரிவித்தார். எங்களுக்கு உத்தவ் தாக்கரே மீது மிகுந்த மரியாதை இருக்கிறது, ஆனால் உண்மையில் அவரை தேசிய அளவில் நிறுத்த முடியாது. எனவே பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பது முக்கியம் என தலைமையிடம் கூறினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்