மும்பை,
மும்பை காட்கோபர் - மான்கூர்டு லிங் ரோட்டில் நேற்று காலை 20 வயது வாலிபர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று வாலிபரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். வாலிபரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மர்ம நபர்கள் வாலிபரை கத்தியால் குத்திவிட்டு அவரை சாலையோரம் வீசி சென்று இருப்பதாக போலீசார் கூறினர்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர், கொலையாளிகள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் கத்தி குத்து காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவத்தால் நேற்று காட்கோப் - மான்கூர்டு லிங் ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.