3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

Update:2022-12-11 00:15 IST

வசாய்,

தானே மாவட்டம் பயந்தர் நவ்கர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சிறுவர்களை வைத்து வேலை வாங்கி வருவதாக மிராபயந்தர்-வசாய்விரார் போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் கடந்த 8-ந்தேதி கம்பெனிக்கு சென்று சோதனை நடத்தினர். இதில் எலக்ட்ரிக் மெட்டல் பிரிவில் 3 சிறுவர்கள் வேலை பார்த்து வந்ததை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து அவர்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கம்பெனி மேலாளரை கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய உரிமையாளர் தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்