ஆயுதத்தை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.1.20 கோடி பறிப்பு; ஆசாமிகளுக்கு வலைவீச்சு

நாக்பூர் இட்வாரியில் ஆயுதங்களை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியர்களிடம் ரூ.1.20 கோடி பறித்த ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு;

Update:2023-08-03 01:45 IST

நாக்பூர், 

நாக்பூர் இட்வாரி பகுதியில் தனியார் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்து ரூ.1 கோடியே 20 லட்சம் பணத்தை சேகரித்து பூட்டாடா சேம்பர்ஜ் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் 2 ஊழியர்கள் கொண்டு சென்றனர். அப்போது வழியில் 2 பேர் கூர்மையான ஆயுதங்களை காட்டி வழிமறித்தனர். ஊழியர்களை மிரட்டி பணப்பை மற்றும் செல்போன்களை பறித்தனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர். இது பற்றி ஊழியர்கள் போக்குவரத்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் லக்கட்கஞ்ச் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை வழிப்பறி செய்து தப்பி சென்ற 2 பேரை பிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்