பெண் தொழில் அதிபரிடம் ரூ.1.80 கோடி நகைகள் அபேஸ் - ஏஜெண்டு உள்பட 2 பேர் கைது
விற்று தருவதாக கூறி பெண் தொழில் அதிபரிடம் ரூ.1 கோடியே 80 லட்சம் நகைகளை அபேஸ் செய்த ஏஜெண்டு உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மும்பை,
விற்று தருவதாக கூறி பெண் தொழில் அதிபரிடம் ரூ.1 கோடியே 80 லட்சம் நகைகளை அபேஸ் செய்த ஏஜெண்டு உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 கிலோ நகைகள்
கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவர் தனக்கு சொந்தமான நகைகளை விற்க முடிவு செய்தார். இதற்காக நகைகளை விற்பனை செய்யும் மும்பையை சேர்ந்த ஏஜெண்டு சாமட்கான்(வயது29) என்பவரை தொடர்பு கொண்டார். அவர் 3 கிலோ எடையுள்ள நகைகளை ரூ.1 கோடியே 80 லட்சத்திற்கு விற்று தருவதாக பெண் தொழில் அதிபரிடம் உறுதி அளித்தார்.
இதனை நம்பிய பெண் தனது ஊழியர் அப்துல் வாசித் என்பவரிடம் நகைகளை கொடுத்து அனுப்பினார். அவர், மும்பை சாக்கிநாக்கா பகுதியில் உள்ள ஓட்டலில் இருந்த ஏஜெண்டு சாமட்கானை சந்தித்து நகைகளை கொடுத்தார்.
2 பேர் கைது
இதன் பிறகு சில மணி நேரத்தில் நகைகள் அடங்கிய பையை மர்மநபர் பறித்து சென்றதாக சாமட்கான் அப்பெண்ணிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரி்ன் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் நகை பறிப்பு சம்பவம் எதுவும் அங்கு நடைபெறவில்லை எனவும், சாமட்கான் தான் நகைகளை தனது கூட்டாளியான மன்சூர் பட்டான்(38) என்பவருடன் சேர்ந்து அபேஸ் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நகைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.