ரூ.5 கோடி போதைப்பொருள் பறிமுதல்- மும்பை என்.சி.பி. அதிகாரிகள் நடவடிக்கை

வெவ்வேறு சம்பவங்களில் மும்பை என்.சி.பி. அதிகாரிகள் ரூ.5 கோடி போதை பொருளை பறிமுதல் செய்தனர்.;

Update:2022-08-08 22:30 IST

மும்பை, 

வெவ்வேறு சம்பவங்களில் மும்பை என்.சி.பி. அதிகாரிகள் ரூ.5 கோடி போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு கூரியர் பார்சல்

போதை பொருள் கடத்தலை தடுக்க மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவினர் (என்.சி.பி.) தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து மும்பைக்கு அதிகளவில் கூரியர் மூலம் போதை பொருள் கடத்தப்படுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நடந்த சோதனையில் அதிகாரிகள் அமொிக்காவில் இருந்து நாக்பூரை சேர்ந்தவருக்கு அனுப்பப்பட்ட 870 கிராம் ஹைட்ரோபோனிக் போதை பொருள் கூரியர் பார்சலை பறிமுதல் செய்தனர்.

இதேபோல மற்றொரு வழக்கில் நாக்பூரில் இருந்து நியூசிலாந்துக்கு கூரியர் மூலம் கடத்தப்பட இருந்த 4.95 கிலோ மெத்தாகுலோன் என்ற போதை பொருளை பறிமுதல் செய்தனர்.

ரூ.5 கோடி போதை பொருள்

நேற்று இரவு போதை பொருள் தடுப்பு பிரிவினர் மும்பை - புனே நெடுஞ்சாலையில் கர்ஜத் பகுதியில் வாகனத்தை மறித்து சோதனை போட்டபோது, அதில் ரகசிய இடம் அமைத்து கடத்தப்பட்ட 88 கிலோ உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். 3 வழக்குகளிலும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்த போதை பொருளின் மதிப்பு ரூ.5 கோடி என அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்