ஓசிப்பயணம் செய்தவர்களிடம் ரூ.82 கோடி அபராதம் வசூல்
மத்திய ரெயில்வேயில் ஓசிப்பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.82 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.;
மும்பை,
மத்திய ரெயில்வேயில் ஓசிப்பயணம் செய்த பயணிகளிடம் இருந்து ரூ.82 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரூ.82 கோடி வசூல்
மத்திய ரெயில்வே ரெயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நபர்களை பிடித்து அபராதம் விதித்து வருகிறது. இதில் கடந்த 9 மாதங்களில் மத்திய ரெயில்வேயில் ஓசிப்பயணம் செய்தவர்களிடம் இருந்து ரூ.82 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை ரெயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 14.39 லட்சம் பேர் பிடிப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.81.70 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைவிட அதிகம்
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வசூலானதைவிட 79 சதவீதம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 8.99 லட்சம் பேரிடம் இருந்து ரூ.45.66 கோடி வசூலிக்கப்பட்டு இருந்தது. பயணிகள் உரிய டிக்கெட் வாங்கி ரெயில்களில் பயணம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.