காந்திவிலியில் திருநங்கைக்கு அரிவாள் வெட்டு

Update:2023-04-15 00:15 IST

மும்பை, 

மும்பை காந்திவிலி பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ரீனா சேக் (வயது23). இவர் அந்த பகுதியில் உள்ள தேங்காய் கடையில் அடிக்கடி யாசகம் கேட்டு கடைக்காரருக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்றும் அவர் தேங்காய் கடைக்காரரிடம் யாசகம் கேட்டு தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தேங்காய் கடைக்காரர் திருநங்கையை அரிவாளால் வெட்டினார். இதில் திருநங்கைக்கு படுகாயம் ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்