சிலருக்கு உள்ள சந்தேகத்தை போக்க மோடி நிகழ்ச்சியை சரத்பவார் புறக்கணித்து இருக்கலாம்; உத்தவ் சிவசேனா கருத்து

சிலருக்கு உள்ள சந்தேகத்தை போக்க சரத்பவார், மோடி நிகழ்ச்சியை புறக்கணித்து இருக்கலாம் என உத்தவ் தாக்கரே சிவசேனா கூறியுள்ளது.;

Update:2023-08-02 01:30 IST

மும்பை, 

சிலருக்கு உள்ள சந்தேகத்தை போக்க சரத்பவார், மோடி நிகழ்ச்சியை புறக்கணித்து இருக்கலாம் என உத்தவ் தாக்கரே சிவசேனா கூறியுள்ளது.

புறக்கணித்து இருக்கலாம்

பிரதமர் மோடி நேற்று புனேயில் நடந்த திலகர் தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அவருக்கு லோக்மான்ய திலகர் தேசிய விருது வழங்கப்பட்டது. விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் கலந்து கொண்டார். இந்தநிலையில் சிலருக்கு சரத்பவார் மீது உள்ள சந்தேகத்தை போக்க, அவர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்து இருக்கலாம் என உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கூறியுள்ளது.

கட்சியை உடைத்தவர்

இது தொடர்பாக அந்த கட்சியின் சாம்னா பத்திரிகையில் கூறப்பட்டு இருந்ததாவது:- பிரதமர் மோடி தேசியவாத காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறினார். மேலும் அந்த கட்சியை உடைத்து மராட்டிய அரசியலை களங்கப்படுத்தினார். இதற்கு பிறகும் சரத்பவார், மோடியை வரவேற்பதில் சிலருக்கு உடன்பாடு இல்லை. எனவே அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து தன் மீது சிலருக்கு உள்ள சந்தேகத்தை போக்க சரத்பவாருக்கு இது சரியான வாய்ப்பாக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்