சாலை விபத்தில் கப்பல் ஊழியர் பலி
சாலை விபத்தில் கப்பல் ஊழியர் பலியானார்.;
மும்பை,
மும்பை லோயர் பரேல் பகுதியை சேர்ந்தவர் மயூர் பாட்டீல் (வயது38). வணிக கப்பல் ஊழியர். இவர் 3 மாத விடுமுறையில் வீட்டுக்கு வந்து இருந்தார். உறவினர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்து போரிவிலிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மேற்கு விரைவு சாலையில் வில்லேபார்லே அருகே சென்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மயூர் பாட்டீல் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு கூப்பர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து கப்பல் ஊழியர் மீது வாகனத்தை மோதிவிட்டு நிற்காமல் சென்ற டிரைவரை தேடிவருகின்றனர். விபத்தில் பலியான கப்பல் ஊழியர் அடுத்த மாதம் மீண்டும் கப்பலுக்கு செல்ல இருந்ததாக குடும்பத்தினர் கூறினர்.