தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.;
தானே,
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
தாக்குதல்
தானே மாவட்டம் அம்பர்நாத் நகரில் உள்ள தத்தா குடிர் குடிசை பகுதியை சேர்ந்தவர் தேவிதாஸ் சூரியவன்சி(வயது 60). இவருக்கு மகனுடன் நீண்ட நாட்களாக மனஸ்தாபம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 11.30 மணி அளவில் தந்தை, மகன் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் கடும் ஆத்திரமடைந்த மகன் கையில் கிடைத்த பிளைவுட் பலகையால் தந்தை என்றும் பாராமல் தேவிதாஸ் சூரியவன்சியை கடுமையாக தாக்கினார்.
துடிதுடித்து சாவு
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார். இந்த நிலையில் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தேவிதாஸ் சூரியவன்சியின் உறவினர் கொடுத்த புகாரின் பேரில் அவரின் மகனை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.