தாயை கொன்று தற்கொலை நாடகமாடிய மகன் கைது

தாயை கழுத்தை நெரித்து கொன்று தற்கொலை செய்ததாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-09-07 19:29 IST

தானே,

தாயை கழுத்தை நெரித்து கொன்று தற்கொலை செய்ததாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்தனர்.

தாயுடன் தகராறு

தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்தவர் ரவி பும்னி. இவர் நவிமும்பை கன்சோலியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் தாய் சரோஜா(50) என்பவருடன் வசித்து வந்தார். சமீப நாட்களாக பணம் மற்றும் குடும்ப பிரச்சினை தொடர்பாக தாய் சரோஜாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

கடந்த 4-ந்தேதி இரவு மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மறுநாள் காலையில் சரோஜாவை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். இதன்பின்னர் தடயங்களை மறைக்க துணியால் மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டார்.

தற்கொலை நாடகமாடிய மகன் கைது

இதையடுத்து ரவி பும்னி தனது தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கொல்சேவாடி போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்ததாக தெரியவந்தது. இதனால் போலீசார் சந்தேகத்தின் பேரில் ரவி பும்னியை பிடித்து கிடுக்குப்பிடியாக விசாரித்தனர். அப்போது குட்டு அம்பலம் ஆனது.

பெற்ற தாயை கொலை செய்து தற்கொலை நாடகம் ஆடிய மகன் ரவி பும்னியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்