மும்பை,
சி.பி.ஐ. பொருளாதார குற்றப்பிரிவினர் ஸ்டேட் வங்கியிடம் ரூ.280 கோடி ேமாசடியில் ஈடுபட்டதாக கடந்த 2016-ம் ஆண்டு கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் விஜய் குப்தா, அஜய் குப்தா, ஸ்டேட் வங்கி ஊழியர் வி.என். கதம் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். விசாரணையில் மோசடியில் தென்மும்பையை சேர்ந்த கட்டுமான அதிபர் ஹரிஷ் மேத்தாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஹரிஷ் மேத்தாவை சி.பி.ஐ. கைது செய்தது. விசாரணைக்கு பிறகு சி.பி.ஐ. அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. கோர்ட்டு கட்டுமான அதிபரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது