மும்பை,
மும்பை மாகிம் சேனாபதி பாபட் மார்க் மாரி நகர் பகுதியில் நித்யாசயா என்ற குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று முன்தினம் இரவு 10.15 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதற்கிடையே தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 4 வாகனங்களிலும் மற்றும் பெஸ்ட் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்றனர். அங்கு பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். முன்னதாக அசம்பாவிதம் நடைபெறா வண்ணம் கட்டிடத்தின் மின்இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை எனவும், இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.