மும்பை,
மும்பை அந்தேரி கிழக்கு மரோல்நாக்கா பகுதியில் 2 மாடி கொண்ட கட்டிடத்தில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறியடித்தபடி கட்டிடத்திற்கு வெளியே ஓட்டம் பிடித்து உயிர் தப்பினர்.
இது பற்றி அறிந்த தீயணைப்பு படையினர் 8 வாகனங்களில் விரைந்து வந்து தொழிற்சாலையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.