பெஸ்ட் பஸ்களில் பயணிக்க தனியார் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர சீசன் டிக்கெட் - உத்தவ் தாக்கரே தொடங்கி வைத்தார்

தனியார் பள்ளி மாணவர்களுக்கு பெஸ்ட் பஸ்களில் பயணிக்க வசதியாக மாதாந்திர சீசன் டிக்கெட்டை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.;

Update:2022-06-17 18:52 IST

மும்பை, 

தனியார் பள்ளி மாணவர்களுக்கு பெஸ்ட் பஸ்களில் பயணிக்க வசதியாக மாதாந்திர சீசன் டிக்கெட்டை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார்.

மாதந்திர சீசன் டிக்கெட்

மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டாக திறக்கப்படாமல் இருந்த பள்ளிகள் கடந்த 15-ந் தேதி முதல் முழுமையாக தொடங்கப்பட்டது. இந்தநிலையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் சீசன் டிக்கெட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

பெஸ்ட் பஸ்களில் பயணிப்பதற்காக குறைந்த கட்டணம் கொண்ட மாதாந்திர சீசன் டிக்கெட் திட்டத்தை முதல்-மந்திரி உத்தவ்தாக்கரே தொடங்கி வைத்தார்.

கட்டணம் நிர்ணயம்

இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.200 கட்டணமாகவும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் ரூ.250 கட்டணமாகவும், ஜூனியர் கல்லூரிகளான 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.350 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்