பிரதமர் மோடிக்கு, பட்னாவிஸ் நன்றி

தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு ரெயில்வே நிலம் வழங்கிய பிரதமர் மோடிக்கு, தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்தார்.;

Update:2023-01-20 00:15 IST

மும்பை, 

தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு ரெயில்வே நிலம் வழங்கிய பிரதமர் மோடிக்கு, தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே பற்றி விமர்சனம்

பிரதமர் மோடி நேற்று மும்பை பி.கே.சி. மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.38 ஆயிரம் கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து பேசினர்.

துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், "2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது இரட்டை என்ஜின் அரசுக்கு (மத்திய, மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி) வாக்களிக்குமாறு பொது மக்களிடம் வலியுறுத்தினார். ஆனால் சிலர் (உத்தவ் தாக்கரே) செய்த துரோகத்தால் மாநிலத்தில் கடந்த 2½ ஆண்டுகளாக மக்கள்நல அரசு இல்லை. ஆனால் பால்தாக்கரேவின் உண்மையான விசுவாசிகளால் (ஷிண்டே அணி) மாநிலத்தில் நமது அரசு மீண்டும் அமைந்து உள்ளது" என்றார்.

தாராவி சீரமைப்பு திட்டத்துக்கு ரெயில்வே நிலத்தை வழங்கிய பிரதமர் மோடிக்கு பட்னாவிஸ் நன்றி தெரிவித்தார்.

மோடிக்கு புகழாரம்

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-

கடந்த மகாவிகாஸ் ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் பின்னடைவை சந்தித்தது. மோடியின் தலைமையால் நாங்கள் மும்பை மக்களை மகாவிகாஸ் அகாடி அரசிடம் இருந்து விடுவித்தோம். மோடியிடம் ஒரு சிறந்த தன்மை உள்ளது. நான் புனிதமாக உணருகிறேன். உலக பொருளாதார அமைப்பு ஆண்டு கூட்டத்தில் பிரதமர்மோடி தான் அதிகம் பேசப்பட்டார். நாங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் மும்பையை மாற்றுவோம். நாட்டின் நிதி தலைநகருக்கு புதிய அடையாளத்தை தருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்