சினிமா ஸ்டூடியோ தீயில் எரிந்து நாசம்
நடிகை துனிஷா சர்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சினிமா ஸ்டூடியோ தீயில் எரிந்து நாசமானது.;
வசாய்,
நடிகை துனிஷா சர்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சினிமா ஸ்டூடியோ தீயில் எரிந்து நாசமானது.
பயங்கர தீ
பால்கர் மாவட்டம் வசாய் அருகே பஜன்லால் என்ற சினிமா ஸ்டூடியோ உள்ளது. இந்த ஸ்டூடியோவில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் அவசரமாக வெளியேறினர். அங்கு பற்றிய தீயை அணைக்க முயன்றனர். முடியாமல் போனதால் தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்டூடியோவில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அங்கு பற்றிய தீயை முற்றிலும் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் யாரும் காயமடையவில்லை. இருப்பினும் ஸ்டூடியோ எரிந்து நாசமானது.
காரணம் என்ன?
தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து நடந்த பஜன்லால் ஸ்டூடியோவில் தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி 'அலிபாபா தஸ்தான் இ காபூல்' என்ற டி.வி. சீரியலில் நடித்து வந்த நடிகை துனிஷா சர்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.