தானே,
பிவண்டி பகுதியை சேர்ந்த வாலிபரை போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து இருந்தனர். சம்பவத்தன்று பிவண்டி பகுதியில் திருட்டு நடந்த இடத்துக்கு வாலிபரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அங்கு வாலிபரின் 59 வயது தந்தை வந்தார். அவர் வாலிபரை தப்பிக்க வைக்க போலீசாரை தள்ளிவிட்டார். போலீசார் வாலிபரை தப்பவிடாமல் தடுத்த போது, அவர் போலீசாரை தாக்கினார். ஒரு போலீஸ்காரரின் விரலை கடித்தார். மேலும் அவதூறாக பேசி போலீசாரின் சீருடையை கிழித்தார்.
போலீசார் சுதாரித்து கொண்டு வாலிபரின் தந்தையை பிடித்து கைது செய்தனர். அவர் மீது பணியில் இருந்த அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.