வீடு புகுந்து கொள்ளையடித்து வந்தவர் கைது

வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தவரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு 40 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.;

Update:2023-03-30 00:15 IST

வசாய், 

வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து வந்தவரை போலீசார் கைது செய்தனர். இவருக்கு 40 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

போலீசில் புகார்

தானே மாவட்டம் காஷிமிரா பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவர் 23-ந்தேதி ரமலான் தொழுகைக்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது அங்கிருந்த ரூ.23 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது பற்றி காஷிமிரா போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

40 வழக்குகளில் தொடர்பு

இதில், டெல்லியை சேர்ந்த அப்துல் சீரா என்பவர் தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் மும்பை, தானே, பால்கர் மற்றும் அஜ்மீர் பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளார். அவருக்கு 40 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை பிடிக்க நடத்திய விசாரணையில் நாலாச்சோப்ரா அச்சோலே பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.23 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்