8 ஆண்டு கால மோடி அரசின் 8 தோல்விகள்- தேசியவாத காங்கிரஸ் பட்டியலிட்டது

8 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 8 தோல்விகளை தேசியவாத காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டு உள்ளது.;

Update:2022-05-26 21:06 IST

மும்பை, 

8 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 8 தோல்விகளை தேசியவாத காங்கிரஸ் கட்சி பட்டியலிட்டு உள்ளது.

8 ஆண்டு தோல்வி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவியேற்று 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 8 ஆண்டு மோடி ஆட்சியில் கண்ட தோல்விகளை தேசியவாத காங்கிரஸ் பட்டியலிட்டு உள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் மகேஷ் தபசே கூறியதாவது:-

பொருளாதாரம் சரிவு

உயரும் பணவீக்கம், அதிகரித்துள்ள வேலையின்மை, ஜனநாயகத்தை நசுக்குதல், தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதில் தோல்வி, வெறுப்பு அரசியல், ரூபாய் மதிப்பு சரிவு, பொருளாதார சரிவு மற்றும் சமூக கட்டமைப்பில் பாதிப்பு போன்றவை கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் மோடி அரசு சந்தித்த 8 தோல்விகள் ஆகும்.

இந்த 8 ஆண்டுகால மோடி அரசின் தவறான ஆட்சியில் நாடு நிறைய இழந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் நாட்டின் மத நல்லிணக்கத்தை அழித்துவிட்டது. மதம் மற்றும் இனம் ஆகியவை அறிவியல் மற்றும் சமத்துவத்தின் மீது ஏறி நின்று ஆட்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்