தொழில் அதிபர் டாக்சியில் மறந்துவிட்டு சென்ற ரூ.42 லட்சத்தை கண்டுபிடித்து கொடுத்த போலீசார்

தொழில் அதிபர் டாக்சியில் மறந்துவிட்டு சென்ற ரூ.42 லட்சத்தை போலீசார் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.;

Update:2023-07-07 00:15 IST

மும்பை, 

தொழில் அதிபர் டாக்சியில் மறந்துவிட்டு சென்ற ரூ.42 லட்சத்தை போலீசார் கண்டுபிடித்து ஒப்படைத்தனர்.

ரூ.42 லட்சத்தை மறந்து சென்ற தொழில் அதிபர்

மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அல்பேஷ் லாப்சியா (வயது38). இவர் கடந்த திங்கட்கிழமை இரவு தென்மும்பை பகுதியில் உள்ள குலால்வாடியில் இருந்து காட்கோபருக்கு டாக்சியில் சென்றார். அவர் காட்கோபரில் இறங்கியபோது, ரூ.42 லட்சம் பணம் வைத்திருந்த பையை டாக்சியில் மறந்துவிட்டு சென்றார். வீட்டுக்கு சென்ற பிறகு தான் டாக்சியில் பணத்தை மறந்து வைத்துவிட்டு வந்தது தொழில் அதிபருக்கு நினைவுக்கு வந்தது. உடனடியாக அவர் சம்பவம் குறித்து பான்ட்நகர் போலீசில் புகார் அளித்தார்.

பணத்தை மீட்ட போலீசார்

போலீசார் கிழக்கு விரைவு சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். வாடி பந்தர் சிக்னல் பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, தொழில் அதிபர் பயணம் செய்த டாக்சி எண் தெரிந்தது. அதன் மூலம் போலீசார் தாா்டுதேவ் பகுதியில் உள்ள டாக்சி டிரைவரின் வீட்டுக்கு சென்றனர். அங்கு தொழில் அதிபரின் பணப்பை இருந்தது. போலீசார் ரூ.42 லட்சத்துடன் இருந்த பணத்தை மீட்டு தொழில் அதிபரிடம் ஒப்படைத்தனர். தொழில் அதிபர் டாக்சி டிரைவருக்கு எதிராக புகார் எதுவும் அளிக்கவில்லை. எனவே போலீசார் டாக்சி டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


Tags:    

மேலும் செய்திகள்