தேசியவாத காங்கிரசில் ஏற்பட்ட குழப்பத்துக்கு சரத்பவார் குடும்பம் தான் காரணம் - மந்திரி சகன் புஜ்பால் கூறுகிறார்

தேசியவாத காங்கிரசில் ஏற்பட்டு இருக்கும் குழப்பத்துக்கு சரத்பவார் குடும்பம் தான் காரணம் என மந்திரி சகன் புஜ்பால் கூறியுள்ளார்.;

Update:2023-07-10 01:00 IST

நாசிக், 

தேசியவாத காங்கிரசில் ஏற்பட்டு இருக்கும் குழப்பத்துக்கு சரத்பவார் குடும்பம் தான் காரணம் என மந்திரி சகன் புஜ்பால் கூறியுள்ளார்.

பொதுகூட்டம்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் மற்றும் சகன் புஜ்பால் உள்பட 9 பேர் பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரிசபையில் இணைந்துள்ளனர். இது தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைய காரணமாக அமைந்துள்ளது. இந்தநிலையில் கட்சியை மீண்டும் பலப்படுத்தும் வகையில் சரத்பவார் பொதுக்கூட்டம் நடத்த தொடங்கி உள்ளார். மந்திரி சகன் புஜ்பாலின் நாசிக் யோலா தொகுதியில் அவர் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சகன்புஜ்பாலை நம்பி நான் தவறு செய்துவிட்டதாக சரத்பவார் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து மந்திரி சகன் புஜ்பால் நேற்று கூறியதாவது:-

குடும்பத்தால் அதிருப்தி

சரத்பவார் அவர்களே நீங்கள் எதற்காக யோலாவுக்கு வந்தீர்கள்? இதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. கட்சியில் ஏற்பட்ட குழப்பத்துக்கு நான் பொறுப்பல்ல. நான் ஒரு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தலைவர். ஆகையால் மராட்டியத்தின் வலிமை மிக்கவர் என்று அழைக்கப்படும் சரத்பவார், தனது பொதுக்கூட்டத்திற்கு எனது தொகுதியான யோலாவை தேர்வு செய்து இருக்கலாம். இந்த அதிருப்தி அணியை நான் உருவாக்கியதாக சரத்பவார் நினைக்கிறார். ஆனால் எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது அவரது குடும்பத்தில் தான் நடந்தது. பிரபுல் படேல் டெல்லியில் அவரது சக ஊழியர், அஜித்பவார் அவரது குடும்பத்தை சேர்ந்தவர் மற்றும் திலீப் வால்சே பாட்டீல் அவரது நெருங்கிய உதவியாளர்.

மன்னிப்பு கேட்பதா?

சரத்பவார் யோலாவுக்கு வந்தது வருத்தம் அளிக்கிறது. எனக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுத்து தவறு செய்துவிட்டதாக கூறி மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் யோலாவில் என்னால் தான் வளர்ச்சி ஏற்பட்டது. எனவே மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே அங்கு இடம் இல்லை. இதேபோல எத்தனை இடங்களில் மன்னிப்பு கேட்பீர்கள். நாசிக் மாவட்டத்தில் உள்ள மக்கள் சரத்பவாரை நேசிப்பது உண்மையானால் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவரும் எப்படி இங்கு தோல்வி அடைந்தனர். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். 

Tags:    

மேலும் செய்திகள்