மனைவியை கொலை செய்துவிட்டு பாவமன்னிப்பு கேட்க கோவிலுக்கு சென்ற வாலிபர் கைது
மும்பை,
நவிமும்பை காமோதே பகுதியை சேர்ந்தவர் பீரப்பா ஸ்ரீரங் (வயது36). இவரது மனைவி சில்வந்தா(34). மந்திராலயா ஊழியரான பீரப்பா ஸ்ரீரங் மனைவியின் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்கமாட்டார். இதன் காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று பீரப்பா ஸ்ரீரங் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் சோலாப்பூரில் உள்ள பலுமாமா கோவிலுக்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்த அங்கு விரைந்து சென்ற போலீசார் கோவிலில் அன்னதானம் சாப்பிட்டு கொண்டு இருந்த பீரப்பா ஸ்ரீரங்கை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், பீரப்பா ஸ்ரீரங் மனைவியை கொலை செய்துவிட்டு பாவமன்னிப்பு கேட்க சோலாப்பூர் கோவிலுக்கு சென்றதாக தெரிவித்தார்.