மும்பை,
போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி கதையை மையமாக வைத்து இணையதள தொடர் (வெர் சீரிஸ்) தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் இணையதள தொடருக்கு தடை கேட்டு மறைந்த அப்துல் கரீம் தெல்கியின் மகள் சனா இர்பான் மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனுவில், " இணையதள தொடர் தாயாாிப்பாளர் அப்துல் கரீம் தெல்கி குறித்து படம் எடுக்க தனது குடும்பத்தினாிடம் எந்த அனுமதியும் பெறவில்லை எனவும், இணையதள தொடர் எங்கள் குடும்பத்தின் தனியுரிமை, மாண்பு, சுயமரியாதைக்கு எதிராக உள்ளதாக" கூறி இருந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு அப்துல் கரீம் தெல்கி தொடர்பான இணையதள தொடரை வெளியிட இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.