புல்தானா அருகே அரசு பஸ் உரசி சென்றதில் 2 பேரின் கைகள் துண்டாகின
புல்தானா அருகே அரசு பஸ் உரசி சென்றதில் 2 பேரின் கைகள் துண்டாகின. இது தொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
மும்பை,
புல்தானா அருகே அரசு பஸ் உரசி சென்றதில் 2 பேரின் கைகள் துண்டாகின. இது தொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கை துண்டானது
புல்தானா மாவட்டம் மல்காபூர் பஸ் டெப்போவில் இருந்து மாநில அரசின் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது. செல்லும் வழியில் அந்த பஸ்சின் பக்கவாட்டில் உள்ள பெட்டி ஒன்றின் கதவு திறந்து உள்ளது.
உரா பகுதியில் சென்ற போது அந்த பெட்டியின் கதவு நடந்து சென்ற ஒருவர் மீது உரசி உள்ளது. இதில் அவரது ஒரு கை துண்டானது. இது தெரியாமல் டிரைவர் பஸ்சை தொடர்ந்து ஓட்டி சென்றார். அபா பகுதியில் நடந்து சென்ற மற்றொருவர் மீதும் அந்த கதவு மோதியது. இதில் அவரது ஒரு கையும் துண்டிக்கப்பட்டது.
2 பேரும் மீட்பு
இந்த சம்பவங்கள் நடந்த பிறகு கியர் பாக்ஸ் கதவு திறந்து கிடந்த விவகாரமும், அதனால் ஏற்பட்ட விபரீதமும் டிரைவருக்கு தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் கைகள் துண்டிக்கப்பட்ட 2 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்கள் பெயர் பரமேஸ்வர் சுரதாகர்(வயது45), விகாஸ் பாண்டே (22) என்று தெரியவந்தது. ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த இரு சம்பவங்களும் வெவ்வேறு பகுதியில் நடந்ததால், இது தொடர்பாக பிம்பல்காவ் மற்றும் தமங்காவ் போலீசார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------