விராரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த அண்ணன், தம்பி கைது.

விரார் சந்தன்சர் ரோடு பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து அண்ணன்-தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-06-20 00:45 IST

மும்பை, 

விரார் சந்தன்சர் ரோடு பகுதியில் வங்காளதேசத்தை சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வங்காளதேசத்தை சேர்ந்த சோகிப் முதாலபி சேக் (வயது44), அவரது தம்பி ரகீம் சேக் (34) ஆகியோர் உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பது தெரியவந்தது. 2 பேரும் கடந்த 10, 12 ஆண்டுகளாக உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்து கூலித்தொழில் செய்து வந்து உள்ளனர். வங்காளதேசத்தை சேர்ந்த 2 பேரும் வறுமை காரணமாக மேற்கு வங்க மாநிலம் ஹகிம்புர் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து உள்ளனர். பின்னர் அவர்கள் ஹவுராவில் இருந்து ரெயில் மூலமாக மும்பை வந்ததும், முறைகேடாக ஆதார் கார்டு பெற்று இந்தியர் போல வசித்து வந்ததும் தெரியவந்தது. 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்