பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்- மந்திரி தகவல்

பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.;

Update:2023-01-04 00:15 IST

மும்பை,

மராட்டியத்தில் சுமார் 7 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் நோயாளிகள் பரிதவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், பயிற்சி டாக்டர்கள் தங்களது வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு இருப்பதாகவும் மருத்துவ கல்வி மந்திரி கிரிஷ் மகாஜன் நேற்று இரவு தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்