ஓடும் ஆட்டோவில் பெண் கழுத்து அறுத்து கொலை

ஓடும் ஆட்டோவில் பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2023-06-20 01:15 IST

மும்பை, 

ஓடும் ஆட்டோவில் பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் கழுத்து அறுப்பு

மும்பை சாக்கிநாக்கா, தத் நகர் பகுதியில் உள்ள கைரானி ரோட்டில் நேற்று பகல் 30 வயது பெண்ணும், ஆணும் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். திடீரென 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆண் ஓடும் ஆட்டோவில் பெண்ணின் கழுத்தை அறுத்தார். அதிர்ச்சி அடைந்த பெண், அவரிடம் இருந்து தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்தார். இந்தநிலையில் பெண்ணுடன் இருந்த நபரும் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

பரபரப்பு

தகவல் அறிந்து போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அவரை பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். முதல்கட்ட விசாரணையில் பலியான பெண் சாந்திவிலி சங்கார்ஷ் நகரை சேர்ந்த பஞ்சசீலா ஜாம்தார்(30) என்பதும், அவரை கொலை செய்தவர் தீபக் போர்சே என்பதும் தெரியவந்தது. சம்பவம் குறித்து சாக்கிநாக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் ஆட்டோவில் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்