பட்னாவிஸ் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற பெண்கள்- போலீசார் தடுத்து நிறுத்தினர்

பட்னாவிஸ் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.;

Update:2023-02-14 00:15 IST

நாக்பூர், 

மாநில அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊக்கத்தொகையை விடுவிக்க வலியுறுத்தி கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெண்கள் சுய உதவி குழுவினர் துணை முதல்-மந்திரியின் சொந்த ஊரான நாக்பூரில் போராடி வருகின்றனர். இந்தநிலையில் பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் நாக்பூரில் உள்ள துணை முதல்-மந்திரி அலுவலகம் முன்பு அனுமன் பஜனை பாட போவதாக அறிவித்தனர்.

அதன்படி சுய உதவிக்குழுவினர் நேற்று சம்விதான் சதுக்கத்தில் இருந்து திரிகோணி பார்க்கில் உள்ள தேவேந்திர பட்னாவிஸ் இல்லம் மற்றும் அலுவலகம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் நேற்று போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்