கார் பார்க்கிங் எந்திரம் விழுந்து தொழிலாளி பலி

Update:2023-03-05 00:15 IST

மும்பை, 

மும்பை செம்பூர் செல்காலனி சுவேதா கோ-ஆபரேடிவ் சொசைட்டி கட்டிடத்தின் கீழ் தளத்தில் கார் பார்க்கிங் வசதிக்காக ஹைட்ராலிக் எந்திரம் பொருத்தும் பணி நடந்தது. இந்த பணியில் வினோத் சாகு (வயது34) என்பவர் வேலை பார்த்து வந்தார். அப்போது பார்க்கிங் எந்திரம் திடீரென கீழே விழுந்ததால் அங்கிருந்த வினோத் சாகுவின் தலையில் பட்டு படுகாயமடைந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த நேருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விபத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்