எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை- காதலன், அக்காள் மீது வழக்குப்பதிவு

எலி மருந்து தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது காதலன், அக்காள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;

Update:2023-05-17 00:15 IST

மும்பை, 

பாந்திரா பாரத்நகர் பகுதியில் 19 வயது இளம் வசித்து வந்தார். கடந்த 6-ந் தேதி இளம்பெண் எலிமருந்தை தின்றார். குடும்பத்தினர் இளம்பெண்ணை மீட்டு பாபா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சயான் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இளம்பெண் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

இளம்பெண் 23 வயது வாலிபரை காதலித்து வந்துள்ளார். திடீரென அந்த வாலிபர் இளம்பெண்ணுடனான காதலை முறித்தார். மேலும் வாலிபரின் அக்காள், இளம்பெண்ணை போனில் தொடர்பு கொண்டு காதலை கைவிடுமாறு மிரட்டி உள்ளாா். இதையடுத்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பி.கே.சி. போலீசார் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன், அவரது அக்காள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்