சுதந்திர தினமான இன்று மும்பைக்கு தொடர் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மும்பைக்கு தொடர் குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்;

Update:2023-08-15 01:30 IST

மும்பை, 

மும்பை சைபர் கிரைம் போலீஸ் பிரிவுக்கு கடந்த சனிக்கிழமை மர்ம போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆசாமி சுதந்திர தினத்தன்று மும்பை தாதரில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படும் என்று மிரட்டினான். பின்னர் போன் இணைப்பை துண்டித்து விட்டான். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் லாத்தூரில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று மிரட்டல் விடுத்த 34 வயது நபரை கைது செய்தனர். அவர் வேலை இல்லாதவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி வருகிற 17-ந் தேதி வரை தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்